Sivagangai



ஆதியில் இராமனாதபுரம் அரசு இன்றைய இராமனாதபுரம் , சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகள் அடங்கியதாக அமைந்திருந்தது. கிழவன் சேதுபதி என்ற ரெகுனாத சேதுபதி மன்னர், இராமனாதபுரத்தின் ஏழாவது அரசராக ஆட்சி புரிந்து வந்தார். 

ரெகுனாத சேதுபதியின் மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியார், நாலுகோட்டை பெரிய உடைய தேவர் மகன் சசிவர்ன தேவர்க்கு மனம் முடித்து வைக்கப்பட்டார். தனது மகளுக்கு சீதனமகாக 1000 வீரர்களையும் பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம்,திருப்புவனம் கோட்டைகளை பாதுகாக்கும் பொறுப்பையும் மற்றும் தொண்டி துறைமுகத்தையும் அவர் பொருப்பில் விட்டார். அது தான் பின்னாளில் சிவகங்கை யாக உருவானது. சிவகங்கை சீமை சின்ன வாடகை எனவும், இராமனாதபுரம் பெரிய வாடகை எனவும் அழைக்கப்பட்டது.
சிவகங்கை என்ற பெயருக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், சசிவர்ண தேவர் தனது குரு முனிவர் சாத்தப்பையா தியானம் செய்த இடத்திற்கு அருகிலிருந்த நீர் ஊற்றை விரிவு படுத்தி அதை பெரிய விசாலமான தெப்பகுளமாக உருவாக்கினார்.. சிவனது கங்கை இருந்த இடம் பெயர் மாற்றம் பெற்று சிவகங்கை எனப் பெயர் பெற்ற்து. ஒரு செவ் வேங்கை யை சசி வர்ணர் சுட்டு கொன்றதால் செவ் வேங்கை என்ற பெயர் சிவகங்கை என பெயர் வைக்கப்பட்டதாக ஒரு காரணம் உண்டு.

சிவகங்கை சீமையை சசிவர்ன பெரிய உடைய தேவர் கி.பி. 1730 முதல் 1750 வரை ஆட்சி புரிந்தார். ஆனால் முன்பாகவே தனது மகன் முத்து வடுகனாதரிடம் ஆட்சி செய்யும் உரிமையை கொடுத்து விட்டார்.

பல செப்பேடு, இன் நகரை சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடுகிறது. சிவகங்கை நகருக்கு குளந்தை நகர் என்ற பெயரும் உண்டு.

சிவகங்கை ஜமீனை ஆட்சி செய்த அரசர்களின் பட்டியல்:
1. சசிவர்ன பெரிய உடைய தேவர் 1730 - 1750

முதல் அரசர்.

2. முத்து வடுக நாத தேவர் 1750 - 1772

இரண்டாவது அரசர்.

3. ராணி வேலு நாச்சியார் 1780 - 1789

மூன்றாவது அரசி

4. வெள்ளச்சி நாச்சியர்ர் 1790 - 1792

5. வேங்கை பெரிய உடயண தேவர் 1793 - 1799

சிவகங்கை சீமை 22-01-1730 ஆம் ஆண்டு (சௌமிய ஆண்டு தை மாதம் 13 ஆம் தேதி தோற்றுவிககபட்டது.)

இதன் பிறகு நாலு கோட்டை மன்னர்களின் வம்சம் முடிந்து படமாத்தூர் வம்சம் ஆரம்பமானது.

படமாத்தூர் வம்சம்

6. வல்லப தேவர் 1801 - 1829
7. முத்து வடுகனாதத் தேவர் 1830 - 1831
8. முதல் போத குருசாமித்தேவர் 1831 - 1841
9. இரண்டாவது வல்லப தேவர் 1841 - 1848
10. இரண்டாவது வல்லப தேவர் 1848 - 1863
11. இராணி காத்தம்மை நாச்சியார் 1864 - 1877
12. இரண்டாவது முத்து வடுகனாதத் தேவர் 1877 முதல் 8 மாதங்கள்.
13. துரைச்சிங்க தேவர் 1878 - 1883
14. பெரியசாமி என்ற உடயண ராஜா 1883 - 1898
15. இரண்டாவது துரைச்சிங்க தேவர் 1898 - 1941
16. சண்முக ராஜா 1941 - 1963
17. கார்த்திகேய ராஜா 1963 - 1986
18. இராணி மதுராந்தகி நாச்சியார். 1986 -- இன்று வரை...